கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளை சுட்டிக்காட்டி தனது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அழிவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நல்லாட்சி என கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களை மீள் அனுப்புகிறது எனவும் ஆனால் அவர்களுக்கு தொடர்ச்சியாக சித்திரவதைகள் தொடர்கின்றது எனவும் ஆதாரத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சரின் வினாக்களுக்கு பதில் இன்றி தடுமாறிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் நீங்கள் தாராளமாக இலங்கைக்கு வரலாம் கூறி வினாவில் இருந்து நலுவிக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.