கேக்கைத் திருடிச் சாப்பிட்ட தன் மகனுக்கு தாய் கொடுத்த தண்டனை!
பிறந்த நாள் கேக்கில் ஒரு துண்டைத் திருடிச் சாப்பிட்டதற்காக தாய் ஒருவர் தனது காதலனைக் கொண்டு தனது மகனை அடித்தே கொன்ற சம்பவம் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒரியானா கார்ஸியா (26) தனது பிறந்த நாளை தனது மகன்மார், காதலன் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் கொண்டாடினார். கேக்கை வெட்டி அனைவருக்கும் பரிமாறிய பின்னர், தூங்கிக்கொண்டிருந்த தன் காதலனின் மகளுக்காக ஒரு துண்டை எடுத்துத் தனியே வைத்திருந்தார்.
கேக்கின் ருசியால் ஈர்க்கப்பட்ட கார்ஸியாவின் ஒன்பது வயது நிரம்பிய இளைய மகன் ஜெக் அந்த கேக் துண்டை எடுத்துச் சாப்பிட்டுவிட்டான்.
இதையறிந்த கார்ஸியா, ஜெக்குக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணி, ஜெக்கை ஒரு கதிரையில் அமரவைத்து இரண்டு கைகளையும் கதிரையின் கைப்பிடிகளோடு கட்டிவிட்டார். பின்னர், தன் காதலன் வில்ஸிடம் தனது மகனை அடிக்கச் சொல்லியிருக்கிறார்.
தனது மகளுக்காக வைத்திருந்த கேக் துண்டை திருடிச் சாப்பிட்டுவிட்ட ஜெக் மீது கடும் கோபமுற்றிருந்த வில்ஸ், ஜெக்கை கண்மண் தெரியாமல் தாக்கினார். ஜெக் சுய நினைவிழந்து விழுந்தபோதும் தாக்குதலை நிறுத்தவில்லை.
இதுபற்றி அயலவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அம்பியூலன்ஸையும் கார்ஸியா திருப்பியனுப்பிவிட்டார். கடைசியில், படுகாயமடைந்திருந்த ஜெக் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்தான்.
இதையடுத்து, கார்ஸியா, வில்ஸ் மற்றும் தாக்குதலுக்குத் துணை புரிந்த கார்ஸியாவின் சகோதரன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/80557.html#sthash.hfuLAKl5.dpuf