Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தையை கடத்திய பெண் சிக்கினார் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் பரபரப்பு

November 19, 2017
in News, World
0
குழந்தையை கடத்திய பெண் சிக்கினார் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் பரபரப்பு

ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை, 10 நிமிடங்களில், மருத்துவமனை வளாகத்திலேயே மீட்கப்பட்ட நிலையில், கடத்தல் பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

சமீப காலமாக, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையிலும், மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

10 நிமிடங்கள்இந்நிலையில், ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், நேற்று பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. சுதாரித்த மருத்துவமனை ஊழியர்களால், அந்த குழந்தை கடத்தப்பட்ட, 10 நிமிடங்களில் மீட்கப்பட்டது.

இது குறித்த விபரம் வருமாறு:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார், 26; எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி, 25. கடந்த, 10 நாட்களுக்கு முன், குழந்தை பிறப்புக்காக, ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு, கடந்த, 14ம் தேதி, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின், ஒன்பதாவது வார்டுக்கு செல்வி மாற்றப்பட்டார்.

நேற்று மதியம், 12:00 மணிக்கு, பக்கத்து வார்டில் உள்ளவர்களிடம், குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, செல்வி கழிப்பறைக்கு சென்றார்.அப்போது, ‘பர்தா’ அணிந்து வந்த பெண் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில், செல்வியின் குழந்தையை துாக்கிக் கொண்டு ஓடினார். இதை பார்த்த, பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

ரூ.10 ஆயிரம்மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செவிலியர்கள், மருத்துவமனை காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர், கடத்தல் பெண்ணை தேடினர்.அப்போது,

மருத்துவமனை வளாகத்தில் உள்ள சமையறையில் ஒளிந்து கொண்டிருந்த, அப்பெண்ணை, மருத்துவமனை காவலர்கள் யோகராஜ், ராணி ஆகியோர் மடக்கி பிடித்தனர்.மருத்துவமனை ஆர்.எம்.ஓ., அனிதா கொடுத்த புகாரின் பேரில், ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

உதவி கமிஷனர் ரகுராம், இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் ஆகியோர் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.இதில், கடத்தலில் ஈடுபட்டது, புதுச்சேரியைச் சேர்ந்த ரம்ஜான் பேகம், 36, என்பதும், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடைபாதைவாசி என்பதும், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக மர்ம நபர் கூறியதால், குழந்தையை கடத்தியதும் தெரிய வந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு, தலைமறைவான, ரம்ஜான் பேகத்தின் கூட்டாளி ரெஜினா பேகத்தை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் பின்னணியில், குழந்தை கடத்தல் கும்பல் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Previous Post

ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய 14 வயது சிறுமி பலி

Next Post

தமிழ் இருக்கைக்காக டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துவரும் மொய் விருந்து!

Next Post
தமிழ் இருக்கைக்காக டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துவரும் மொய் விருந்து!

தமிழ் இருக்கைக்காக டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துவரும் மொய் விருந்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures