உலக அரசியலில் அண்மைக்காலமாக ஹீரோவாக பார்க்கப்படுபவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ. புன்னகை மன்னன்.
கனடா மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரை மக்கள் மதிக்கின்றனர். குறிப்பாக தமிழகத்திலும், ஈழத்திலும் அவருக்கு அதிக ரசிகர்கள் உண்டு.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அகதிகளை விரட்டியபோது, அன்போடு அரவணைத்தவர் ஜஸ்டின்.
ஈழ அகதிகள் பலருக்கும் உயர் பதவிகள் அளித்து அழகு பார்த்தவர். அமைச்சரவையில் அதிக இந்தியர்களை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம் இப்போதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிரியாவில் இருந்து வந்த அகதிகள் Pearson சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கு சென்ற ஜஸ்டின் ட்ரூடு, சிரியாவைச் சேர்ந்த ஒரு அகதியின் குழந்தையான Madeleine என்ற 16 மாத குழந்தைக்கு குளிரில் இருந்து விடுபட பிங்க் கலர் கோட் வழங்கி வரவேற்றார்.
உங்கள் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என அவர் கூறியது, அகதிகளை ஆனந்த கண்ணீரில் நனைத்தது.
அகதிகளால் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக சில நாடுகள் குற்றம் சாட்டும் நிலையில், இந்த பிரதமர் தீவிரவாதியை கூட தனது அன்பால் அடிமையாக மாற்றிவிடுவார் என்றால் மிகையாகாது.