குர்தா அணிந்து இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய கனடிய பிரதமர்
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் 70 வது சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் திகதி கொண்டாடப்பட்டது, இந்நிலையில் கனடிய பிரதமர் ட்ரூடோ, Indo-Canadian சமூகத்தினருடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று Indo-Canadian சமூகத்தினருடன் இணைந்து சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கனடாவும், இந்தியாவும் ஜனநாயக மரபுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த இருநாடுகளுக்கு இடையேயான உறவு பலப்பட வேண்டும், அமைதி, பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் ஆண், பெண் சமத்துவம் உட்பட்ட உலகப் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு இரு நாடுகளும் முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.
அனைத்து கனடியர்களும் இதில் கலந்துகொண்டு, இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
குர்தா அணிந்துகொண்டு சுதந்தின தினத்தை கொண்டாடிய ட்ரூடோ, பங்காரா நடனம் ஆடி இந்த விழாவை சிறப்பித்துள்ளார்.
– See more at: http://www.canadamirror.com/canada/68051.html#sthash.23bxHKrO.dpuf