Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை சுவைத்தது சென்னை

March 28, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை சுவைத்தது சென்னை

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக்கின் 7ஆவது போட்டியில் குஜராத்தை 63 ஓட்டங்களால் வீழ்த்திய நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருடம் தனது 2ஆவது நேரடி வெற்றியை சுவைத்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட  அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் மூவரின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஒவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 32 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரச்சின் ரவீந்த்ரா 20 பந்துகளை எதிர்கொண்டு  6 சிக்ஸ்கள், 3 புவுண்டறிகள் உட்பட 46 ஓட்டங்களை விளாசினார்.

அஜின்கியா ரஹானே 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற போதிலும் 2ஆவது விக்கெட்டில் ருத்துராஜ் கய்க்வாட்டுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ரஹானேயைத் தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாட் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (127 – 3 விக்.)

அடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் டுபே, டெரில் மிச்செல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்க உரமூட்டினர்.

ஷிவம் டுபே 23 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைக் குவித்தார்.

சமீர் ரிஸ்வி (14), ரவீந்த்ர ஜடேஜா (7) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.  

டெரில் மிச்செல் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ராஷித் கான் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆரம்பம் முதல் அழுத்தத்துடன் பதிலளித்து துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மூன்று வீரர்கள் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் அவர்கள் மூவரும் பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தனர்.

அணித் தலைவர் ஷுப்மான் கில் வெறும் 8 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ரிதிமான் சஹா 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்ததாக விஜய் ஷன்கர் 12 ஓட்டங்களுடன் வெளியேற 8ஆவது ஓவரில் குஜராத்தின் மொத்த எண்ணிக்கை 55 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் சாய் சுதர்சன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் டேவிட் மில்லர் 21 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 18 ஓட்டங்கள் சேர்ந்தபோது சாய் சுதர்மன் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அத்துடன் வெற்றிபெறலாம் என்ற குஜராத் ஜயன்ட்ஸின் அற்ப சொற்ப நம்பிக்கையும் அற்றுப் போனது.

தொடர்ந்து அஸமத்துல்ல ஓமர்ஸாய் (11), ராஷித் கான் (1), ராகுல் தெவாட்டியா (6) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

உமேஷ் யாதவ் 10 ஒட்டங்களுடனும் ஸ்பென்ஸர் ஜோன்சன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Previous Post

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல | ரணில்

Next Post

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Next Post
ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

கொழும்பிலிருந்து வந்த உத்தரவு : கஜேந்திரனிடம் யாழ். குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை

November 22, 2026
விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

November 22, 2026
ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures