அடுத்து வரும் சில நாட்களுக்குள் பயங்கரவாதக் குழுக்களை, முழுமையாக கிழக்கு மாகாணத்திலிருந்து இல்லாதொழிப்பதாக தான் உத்தரவாதம் அளிப்பதாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நிந்தவுர் பிரதேசவாசியொருவர் தந்த தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று (26) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும், தகவல் உரிய நேரத்துக்கு கிடைத்தமையினால், இன்னுமொரு அழிவை நாட்டில் தடுக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, சகல பிரதேசங்களிலுமுள்ள பொது மக்கள் தமக்கு தகவல்களை வழங்குவது முக்கியமானது எனவும் கட்டளையிடும் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

