Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரை

December 27, 2018
in News, Politics, World
0

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலாளர்களும் எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுமார் 2000 பேருக்கு நலன்புரி முகாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடியிருந்தாலும் நேற்று காலை முதல் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக மக்கள் மீண்டும் நலன்புரி நிலையங்களுக்கு சென்றதாக தெரிவித்தார்.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 18,000 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் சமைத்த உணவுகள் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்கள், சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவண்ணம் தேவையான வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளதுடன், அதற்கமைய மாவட்டத்தில் 17 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான நிதி வழங்கும் நடவடிக்கைகளின் முதலாம் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 10,000 ரூபா வீதம் வழங்கவுள்ளதுடன், ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்ததன் பின்னர் 250,000 ரூபா வரையான தொகையை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள், விற்பனை நிலையங்கள், கிணறுகள் மற்றும் கழிவறைகளை சுத்திகரிப்பதற்கான செயற்திட்டமொன்றை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நட்டஈடு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது ஏக்கருக்கு 40,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் பாதிக்கப்படாதவர்களுக்கு அவர்கள் மீண்டும் தமது வீடுகளில் குடியேறும் போது உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இராணுவத்தினரால் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களை ஆபத்தான இடங்களிலிருந்து நீக்கி மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

57 பிரிவுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்த நலன்புரி நடவடிக்கைகளுக்காக 300 – 400 இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற் படையினரும் 06 குழுக்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் நிர்க்கதியான சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தற்போது மீட்க்கப்பட்டுள்ளதுடன், இலங்கை விமானப் படையினர் அவதானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், ஆபத்தான பிரதேசங்களில் பணியாற்றிவரும் தரைப்படையினருக்கு உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

Previous Post

பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

Next Post

கிளிநொச்சி மக்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு பணிப்பு

Next Post

கிளிநொச்சி மக்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு பணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures