மொன்றியல்-கியுபெக்ரவுனான றிகாட்டில் ஒட்டாவா நதியின் நீர் மட்டம் உயர்ந்து வழிவதால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 340 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அப்பகுதியில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் கொயிரியக்ஸ் உள்ஊர் குடியிருப்பாளர்களிற்கு அவசர கால நிதி கிடைக்க கூடியதற்கான ஆணை உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெள்ளபெருக்கு 1998-ற்கு பின்னர் இடம்பெறும் மிக மோசமானதென தெரிவித்துள்ளார். அத்துடன் பொலிசார் கேட்டு கொண்டால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கேட்டுள்ளார்.
வெள்ளப்பெருக்கு கியுபெக்கில் பருவகாலங்களில் ஏற்படுவதெனவும் இந்த வருடம் பலத்த மழை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து மாகாணம் முழுவதிலும் வீடுகளையும் மற்றய உள்கட்டமைப்புக்களையும் அச்சுறுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ எல்லைக்கருகில் மொன்றியல் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட ரவுனில் மாகாண பொலிஸ் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் ரோந்து சேவையில் ஈடுபட்டுள்ளனரெனவும் இவர் தெரிவித்தார்.
வார இறுதியில் காலநிலை சீராகலாம் என எதிரபார்க்கப்படுகின்றது.