Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காலஅட்டவணையுடன் இலங்கைக்கு காலநீடிப்பு வழங்கப்பட வேண்டும்: அமெரிக்காவின் முன்னாள் தூதுவர்

March 21, 2017
in News
0
காலஅட்டவணையுடன் இலங்கைக்கு காலநீடிப்பு வழங்கப்பட வேண்டும்: அமெரிக்காவின் முன்னாள் தூதுவர்

காலஅட்டவணையுடன் இலங்கைக்கு காலநீடிப்பு வழங்கப்பட வேண்டும்: அமெரிக்காவின் முன்னாள் தூதுவர்

இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகால மேலதிக அவகாசத்தினை வெறுமனகொடுத்துவிட முடியாது என போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் *Steven J Rapp* அவர்கள் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தான்ஒத்துக் கொண்ட எந்தவொரு விடயங்களை முறையாக இலங்கை அரசாங்கம்நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள *Steven J Rapp* அவர்கள், காலஅவகாசம் என்பது ஒத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் செய்து முடிப்பதற்கான கால அட்டவணையுடன் வழங்கப்பட வேண்டும் எனவும் வலிறுத்தியுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விகாரங்களுக்கான அமைச்சர்மாணிக்கவாசகர் அவர்களுக்கும், *Steven J Rapp* அவர்களுக்கான சந்திப்பொன்றுஜெனீவாவில் இடம்பெற்றிருந்தது.

22

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஓபாமா நிர்வாகத்தில் போர்குற்றவிவகாரங்களுக்கான தூதுவராக *Steven J Rapp* அவர்கள் இருந்துள்ளதோடு,இலங்கைத்தீவுக்கு பயணம் செய்து, களநிலைமைகளை ஓபாமா நிர்வாகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பித்திருந்தவர்.

தற்போது ஐ.நா பொதுசெயலர்களான கோபி அனான், பாங்கி மூன் ஆகியோர் பங்காற்றுகின்றநீதிமன்றத்திலும் நீதியாளராகவும் உள்ளார்.

கடந்த வாரம் ஜெனீவாவுக்கு விஜயம் செய்த போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதிநிதிகளைச் சந்தித்திருந்த போதே மேற்குறித்த கருத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைத்தீவின் நடந்தேறிய போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள *Steven J Rapp*அவர்கள், நடந்ததன் உண்மைகள்உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு ஏதோவொருவகையில் ஈடுசெய் நிராவரணம் வழங்கப்பட வேண்டும்.

நடந்தவற்றுக்கான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை மிக அவசியமானது. இலங்கையில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குற்றமிழைத்தவர்களே, சாட்சியங்களை பாதுகாப்பார்கள் என்பதற்கான எந்தவொருஉத்தரவாதமும் இல்லை.இந்நிலையில், இவ்விகாரத்தில் கலப்பு நீதிமன்றம் போன்ற அனைத்துலக பொறிமுறையொன்று இலங்கை விவகாரத்தில் அவசியம் என்றே கருதுகின்றேன்.

மேலும் இரண்டு ஆண்கால நீடிப்பினை வழங்கி விட்டு, இரண்டு ஆண்டுகளின் பின்னரும் அதன் முன்னேற்றங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்க முடியாது.ஆகையால், இலங்கை ஒத்துக் கொண்ட விடயங்களை முறையாக நிறைவேற்றுதவற்கான கால அளவுகளைக் கொண்ட, செயன்முறையுடன் இவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கைத் தீவுக்கான எனது பயணத்தின் போது, வட புலத்தில் அளவுக்கதிகமான இலங்கை படையினரின் பிரசன்னத்தை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மக்களின்அன்றாட வாழ்க்கையிலும், வர்த்தக நடவடிக்கை போன்ற பல்வேறு விடயங்களில் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

எந்தவொரு அச்சறுத்தல்களும் அங்கு இல்லாத நிலையில், அதிகளவிலான படையினரின் பிரச்சனம் ஏன் அங்கு என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறு*Steven J Rapp*அவர்கள் தெரிவித்திருந்தார்.

Tags: Featured
Previous Post

இலங்கை அரசாங்கம் 2 வருட காலத்தில் பொறுப்புக்கூறும் என நம்புவது மடமைத்தனம்!

Next Post

ஐ.நாவில் வெடித்தது சர்ச்சை : முன்னாள் கடற்படை தளபதிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையில் உக்கிர கருத்து மோதல்

Next Post
ஐ.நாவில் வெடித்தது சர்ச்சை : முன்னாள் கடற்படை தளபதிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையில் உக்கிர கருத்து மோதல்

ஐ.நாவில் வெடித்தது சர்ச்சை : முன்னாள் கடற்படை தளபதிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையில் உக்கிர கருத்து மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures