ஒன்ராறியோ-ஹமில்ரன் வாட்டர்டவுன் பகுதியில் 10-வயது சிறுமி ஒருத்தி வாகனம் ஒன்று மோதியதில் மரணமடைந்துள்ளாள். இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை 6.30மணியளவில் நடந்துள்ளது.
நெடுஞ்சாலை 5 மற்றும இவான் வீதியில், சிற்றி வியு பாரக்கில் இடம்பெற்றது.
அவசர மருத்துவ சேவையினர் சம்பவ இடத்திற்கு வந்த போது பாதிக்கப்பட்ட சிறுமி நாடித்துடிப்பற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதிலும் ஏற்பட்ட காயங்களினால் இறந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் சிறுமி வசிப்பவள் என விசாரனையாளர்கள் தெரிவித்தனர். மோதலுக்கு வேகம் மற்றும் மது காரணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்த தகவல்களை விசாரனையாளர்கள் வெளியிடவில்லை.
கைதுகள் எதுவும் இடம்பெறவில்லை ஆனால் வாகன சாரதி ஒத்துழைப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.
ஊடக அங்கத்தவர்கள் இருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பகிரங்கமாக அடையாளம் காணப்படவில்லை.
கைதிற்கான காரணம் எதனையும் குறித்த கருத்துக்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.