காருடன் மோதிய வாடகை காரின் சாரதி கொல்லப்பட்டார்!

காருடன் மோதிய வாடகை காரின் சாரதி கொல்லப்பட்டார்!

வாடகை கார் சாரதி ஒருவர் இரு-கார் மோதலில் இறந்த சம்பவம் யோர்க் மில்ஸ் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.
யோர்க் மில்ஸ் ஓல்ட யங் வீதி பகுதியில் அதிகாலை 2.55 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
யோர்க்மில்ஸ் கிழக்கு பகுதியால் வந்து கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கம்பம் ஒன்றுடன் மோதி திசை மாறி வந்துகொண்டிருந்த வாடகை காரை இடித்துள்ளது.
பெக் வாடகை கார் லிமிடெட்டை சேர்ந்த வாடகை காரின் சாரதி மட்டுமே வாகனத்திற்குள் இருந்தார். அவரை வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்து விட்டார். வாடகை காரை மோதிய வாகனத்தின் சாரதிக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டது.
பெக் வாடகை கார் செயற்பாட்டு முகாமையாளர் சாரதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
ரொறொன்ரோ பொலிசாரின் விசாரனைக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதாக கூறினார்.

taxitaxi1taxi2taxi3taxi4

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *