காரணம் இன்றி தடுத்து வைத்த குற்றச்சாட்டு : விசாரணைகள் ஆரம்பம்

காரணம் இன்றி தடுத்து வைத்த குற்றச்சாட்டு : விசாரணைகள் ஆரம்பம்

 

பொலிஸாரினால் சாதாரண பொதுமகன் ஒருவர் அநாவசியமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஒன்ராறியோ பொலிஸார் நேற்றுத் (சனிக்கிழமை) தொடக்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஓன்ராறியோ மாநில பொலிஸ் அதிகாரிகளின் தகவல்களின் பிரகாரம், 416ஆம் இலக்க நெடுஞ்சாலை வழியே பயணித்த 24 வயது இளைஞன் ஒருவனின் கார் பாதி வழியில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இளைஞன் தனது பயணத்தினை தொடர்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்தவித தகுந்த காரணங்களும் இன்றி கட்டாயத்தின் பேரில் ஒருவரை தடுத்து வைத்தமை குறித்து தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் இவ்விடயம் குறித்து வேறு எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *