காட்டு தீயினால் பழுதடைந்த உணவு பொருட்களை வால்மாட் விற்பதாக சந்தேகம்?
கனடா-வால்மாட், வோட் மக்முறே காட்டு தீயினால் அசுத்தமடைந்த உணவு பொருட்களை வைத்திருந்து விற்பனை செய்வதாக அல்பேர்ட்டா சுகாதார சேவைகள் குற்றம் சாட்டுகின்றது.
மாகாணத்தின் பொது சுகாதார சட்டத்தின் கீழ் வால்மாட் மீது 174 மீறல்கள் சுமத்தப்பட்டுள்ளதாக சுகாதார ஏஜன்சி தெரிவிக்கின்றது.
இக்குற்ற சாட்டுக்களால் வால்மாட் ஆச்சரியமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற பாரிய காட்டு தீயினால் 80,000ற்கும் மேற்பட்ட மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர்.
பழுதடைந்த உணவு பொருட்களை- இனிப்பு வகைகள், உருளைகிழங்கு சிப்ஸ், பீன்ஸ் மற்றும் சுவையூட்டும் பொருட்கள்- உட்பட்டவைகளை அப்புறப்படுத்த தவறிய குற்றச்சாட்டுக்களும் அடங்குகின்றன.
பாதுகாப்பற்ற வெப்பநிலை, புகை, சாம்பல், புகைகரி, தீ தடுப்பான்கள் மற்றும் மின்சக்தி இழப்பு போன்றவைகளால் உணவு பொருட்கள் பழுதடையலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.