கல்லூரி மாணவர்கள் 200பேர்கள் வரை நோயுற காரணம் நோரோ நச்சுயிரி!

கல்லூரி மாணவர்கள் 200பேர்கள் வரை நோயுற காரணம் நோரோ நச்சுயிரி!

கனடா-ஹம்பர் கல்லூரி மாணவர்கள் 200 பேர்கள் வரை நோயுறுவதற்கு காரணம் நோரோ நச்சுயிரி என கருதப்படுகின்றது. இந்நோய் காரணமாக இம்மாணவர்ளகள் வாந்தி மற்றும் வயிற்றுவலி போன்ற உபாதைகளால் அவதிப்பட்டனர். இந்நிலை கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாக மாணவர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டது.
ஞாயிற்றுகிழமை ரொறொன்ரோ பொது சுகாதார துணை மருத்துவ அதிகாரி டாக்டர் Michael Finkelstein செய்தியாளரிடம் பேசுகையில் இந்நோய்க்கான காரணம் நோரோ நச்சுயிரியால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
இதே நேரம் Humber College மாணவர் ஒருவர் முகநூலில் பதிவு செய்த வீடியோ ஒன்றில் கரப்பான் பூச்சி ஒன்று சாப்பாட்டின் மேல் ஊர்ந்து செல்வது தெரிகின்றது.
கல்லூரியின் உணவு கோர்ட்டில் அமைந்துள்ள புறிட்டோ உணவகத்தில் உணவிற்கு ஆர்டர் கொடுத்து விட்டு இருக்கையில் கரப்பான் பூச்சி ஒன்று சாப்பாட்டின் மேல் ஊர்வதை மாணவர் ஒருவர் கண்டார். கண்டதும் அதனை தனது போனில் பதிவு செய்துள்ளார். இச்செய்தி வெள்ளிகிழமையிலிருந்து 140,000 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.
இச்செய்தி ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
கரப்பான் பூச்சி காணப்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக இத்தகை நிகழ்வு காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதிக்கப்பட்ட மாணவர்களில் 11பேர்கள் வரை அவசர மருத்துவ சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குடியிருப்பு கபேயில் உணவருந்தியவர்களாவர்.
நோயுறுவதற்கான காரணம் இன்னமும் நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
விசாரனை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்லூரியின் வடக்கு வளாக குடியிருப்பில் 1,000மாணவர்கள் இருக்கின்றனர்.

nironiro1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *