Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

February 28, 2018
in News, Politics, Uncategorized, World
0
கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

அம்பாறை  தாக்குதல் சம்பந்தமாக எந்தவொரு கைது நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறாத நிலையில் இன்று மதியம் 4 மணியளவில் மொத்தமாக 8 வழக்குகளை அம்பாறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்குகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிகள் சார்பாக சட்டத்தரணிகள் ஹஸ்ஸான் றுஷ்தி முஹைமின் ஹாலித் , ரத்தீப் அஹ்மத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர் .

பொலிஸார் பெரும்பான்மையினத்தவர் எவரையும் இதுவரை கைது செய்யாமை, போதுமான அளவில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்காமை, பள்ளி மூடப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளமை, முஸ்லிம்கள் பயத்தினால் வெளியேறியுள்ளமை மற்றும் இச்சம்பவத்தின் மொத்தப் பின்னனி ஆகியவற்றை நீதிமன்றிற்கு சடடதரணிகள் கூறியிருந்தனர்
மேற்படி விடயங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை அம்பாறை பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளது.

1. அடுத்த தவணைக்கிடையில் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் இயன்றவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்.
2. டயலொக், மொபிடெல், எயார்டெல், ஹட்ச் மற்றும் எடிசலாட் நிறுவனங்கள் கலவர நேரத்தில் இடம்பெற்ற இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட் அனைத்து தொலைபேசி பரிவர்த்தனை விவரங்களை பொலிஸாருக்கு கொடுக்க வேண்டும்.
3. அம்பாறையிலிருந்து பயத்தினால் வெளியேறியிருக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் அவர்களின் இடத்திற்கு சென்றேனும் வாக்குமூலங்களை பொலிஸார் சேகரிக்க வேண்டும்.
4. தாக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து CCTV கமராக்களின் பதிவுகள் அனைத்தும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.
5. முதலில் பிரச்சினையை ஏற்படுத்திய சிங்கள இளைஞரின் தொலைபேசி பரிசோதிக்கபட்டு கலவரத்திற்கான ஆதாரங்களை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களைகளையும் பிணையில் விடுக்கப்பட்டுள்ளது . அம்பாறை SP, ASP, HQI மற்றும் OIC ஆகியோர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலின் பின் அவர்கள் பின்வரும் உத்தரவாதங்களை அளித்தனர்.

1. மிக விரைவில் (நாளை அல்லது மறுநாள்) மூடப்பட்டுள்ள பள்ளவாசல் சுத்தப்படுத்தப்பட்டு தொழுகைளை மேற்கொள்ள திருப்பி தரப்படும்.
2. சேதமடைந்த பள்ளியினை மீளக் கட்ட அரசாங்க அதிபரூடாக நிதி ஒதுக்க முயற்சிக்கப்படும்.
3. வெள்ளிக்கிழமைக்குள் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு கலவரத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவர்.

Previous Post

மட்டக்களப்பில் :6139 மில்லியன் செலவில் 14177 அபிவிருத்தித் திட்டங்கள்

Next Post

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் ஆராய்வு

Next Post

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் ஆராய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures