கர்ப்பிணித் தாயை கொன்று குழந்தையை திருடிய கொடூரம் அதிர்ச்சி சம்பவம்

கர்ப்பிணித் தாயை கொன்று குழந்தையை திருடிய கொடூரம் அதிர்ச்சி சம்பவம்

குழந்தையை திருடுவதற்காக கர்ப்பிணி பெண்னை ஏமாற்றி கடத்திச்சென்று கொலைச் செய்த இளம் தம்பதியை பிரேஸில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ நகரைச் சேர்ந்த ஜோடியான தைநடா சில்வா(21) மற்றும் அவரது கணவர் பேபியா லூயிஸ் ஆகியோருக்கு குழந்தை இல்லாததால் கர்ப்பமுற்ற தாய் ஒருவரைக் கொன்று குழந்தையை தாம் வளர்ப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளனர்.

அதற்காக வட்ஸ் அப் செய்தி மூலம் தமது வீட்டிற்கு வரும் கர்ப்பினி பெண்ணின் குழந்தைக்கு தேவையான உடைகள் இலவசமாக வழங்கப்படும் என விளம்பரம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

அதை ரயானிகிறிஸ்டினி(22) என்ற கர்ப்பினி பெண் பார்த்து விட்டு குறித்த நபர்களை தொடர்பு கொண்டு பார்க்கச் சென்ற வேலை அவரை ஏமாற்றி கடத்திக் கூட்டிச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட ரயானியின் வயிற்றை பலவந்தமாக கிளித்த தம்பதியினர் அவர் வயிற்றில் 9 மாத குழந்தை இருக்கும் என பாரத்திருக்க அவருக்கு 71/2 மாதமான குழந்தையே இருந்துள்ளது.

இதனால் தாய் குழந்தை இருவரையும் கொலை செய்து எரித்து சாம்பலாக்கியுள்ளனர்.

இந்நிலையில் ரயானி காணாமல் போனதை அவரது குடும்பத்தவர்கள் பொலிஸில் அறிவித்துள்ளனர்.

தேடுதலை தொடங்கிய பொலிஸார் ரயில் நிலைய கமராவில் ரயானியை தைநடா பேசி அழைத்து செல்வதை அவதானிக்கவே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

babybaby01

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *