இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் சீனாவிடம், கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணி வழங்கப்படவுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கரவெலப்பிட்டியவில் அமையவுள்ள குறித்த இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக, 350 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்துச்செல்லும் மின்சார பாவனையை, 2019ஆம் ஆண்டில் பூர்த்திசெய்யலாம் என அரசாங்கம் கூறியிருந்தது. அத்தோடு, சூழலுக்கு மாசு ஏற்படாத இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதற்கு உலக நாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்தவகையில், இந்த திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
															
