Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் ‘கல்கி 2898 AD’  வெளியீட்டு திகதி அறிவிப்பு

April 29, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக திகழும் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் இடம்பெறாதது அவரது ரசிகர்களையும், தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கமல்ஹாசன் நடித்திருக்கும் ஒரு திரைப்படத்தில் அவருடைய புகைப்படம் இல்லாமல் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருப்பது இது முதன்முறை என திரையுலக வணிகர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள்.

அத்துடன் படத்தின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு திரையுலகினர் என்பதாலும்  அவர்கள் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாலும் கமல்ஹாசனின் புகைப்படம் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், ரெபல் ஸ்டார் பிரபாஸ், பொலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிவியல் புனைவு கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

புராணங்களை தழுவி எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு கதையாக உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இவர் தோன்றும் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே படத்தின் வெளியீட்டு திகதியுடன் வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகிய மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கமல்ஹாசனுக்கு போஸ்டரில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.  இது தமிழ் திரையுலகத்தினரையும், தமிழ் ரசிகர்களையும் அவமதிக்கும் செயல் என திரையுலக வணிகர்கள் காத்திரமாக விமர்சித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையின் உயர்ந்த மனிதன் முல்லைத்தீவில்

Next Post

கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்

Next Post
கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்

கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures