கனேடிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்க செயலர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக் ரில்லர்சன் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிரீலான்டை இராஜாங்க செயலாளர் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது திறன் பாதுகாப்புவாத அமெரிக்க கொள்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதற்கு விரும்புவதாக ரில்லர்ஸன் தெரிவித்தார்.
மேலும் கனடா மற்றும் மெக்சிகோவுடன் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக ட்ரம்ப் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.