Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனேடியத் தமிழர்களின் தாயக உதவித்திட்டத்தை பார்வையிட்டார் கனேடியத் தூதுவர்

March 30, 2017
in News
0
கனேடியத் தமிழர்களின் தாயக உதவித்திட்டத்தை பார்வையிட்டார் கனேடியத் தூதுவர்

கனேடிய தமிழ் மக்கள் பங்களிப்பில் கட்டப்பட்ட உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் நிர்வாக மற்றும் தொழில் பயிற்சி அலுவலகத்தினை இலங்கைக்கான கனேடிய தூதுவர் சேர்லி விட்டிங் பார்வையிட்டுள்ளார்.

கனேடிய தமிழ் மக்களில் பங்களிப்பிலும் பிராம்டன் தமிழ் ஒன்றிய ஒருங்கிணைப்பிலும் 55 இலட்சம் செலவில் கட்டப்பட்ட குறித்த அலுவலகம் நாளை (30) திறந்து வைக்கப்பட உள்ளது.

11 111 1111 11111 111111அத்துடன் அவ்அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், போசகர் மற்றும் உயிரிழை உறுப்பினர்களை சந்தித்து உயிரிழை அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க இருக்கும் செயற்திட்டங்கள் தொடர்பாக அண்மையில் கலந்துரையாடியுள்ளார்.

கனேடிய தூதுவராலய அதிகாரிகளுடன், உளவள வைத்திய நிபுணர் சிவதாஸ் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கி.வசந்தரூபன், தலைவர் ஜெயகாந்தன் செயலாளர் இருதயராஜா, பொருளாலர் அரவிந்தன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாங்குளத்தில் உள்ள உயிரிழை அமைப்பின் புதிய கட்டத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இச்சந்திப்பின் போது நிர்வாககுழு உறுப்பினர்களாகவும் போசகர்களாவும் தொழிற்படும் மருத்துவர்களும் உடனிருந்து தூதுவருக்கான விளக்கங்களை அளித்தனர்.

இது குறித்து தூதரக டுவிட்டர் பக்கத்தில் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட உயிரிழை உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரினதும் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.

மேலும், மருத்துவம், தொழில், போக்குவரத்து, வாழ்வியலில் நன்னிலையை மேம்படுத்தலும் உறுதிப்படுத்தலும் என்ற உயரிய நோக்கோடு தொழிற்படும் உயிரிழை அமைப்பு மாவட்ட ரீதியாக பின்வரும் எண்ணிக்கையிலான பயனாளிகளை தன் கவனிப்பில் கொண்டுள்ளது.

கிளிநொச்சி – 46 (ஆண்கள் – 36 பெண்கள்- 10), முல்லைத்தீவு – 50 (ஆண்கள் -37 பெண்கள்- 13), யாழ்பாணம் – 37 (ஆண்கள்- 26 பெண்கள் – 11), வவுனியா – 24 (ஆண்கள் – 22 பெண்கள்- 02), மன்னார் – 12 (ஆண்கள்- 08 பெண்கள் -04), திருகோணமலை – 07 (ஆண்கள் – 05 பெண்கள்- 02), மட்டக்களப்பு – அம்பாறை – 14 (ஆண்கள்- 13 பெண்கள்- 01) என்றவாறாக காணப்படுகின்றனர்.

சிறுதுளி செயற்திட்டம் நம்பிக்கை செயற்திட்டம் கல்வி செயற்திட்டம் மருத்துவ சேவைதிட்டம் வாழ்வாதாரம் மேம்படுத்தல் ஆகிய செயற்திட்டங்களும் தொழிற்பயிற்சி செயற்திட்டங்களாக கணனி கற்கைநெறி (திருத்தும் பயிற்சி நெறி) தையல் பயிற்சி நெறி மின்சார உபகரணங்கள் பழுதுபார்த்தல். கைப்பணி பொருட்கள் உருவாக்கம் ஆகிய திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

எடுத்துக் கொண்ட பணியை எவ்வித சலசலப்புமின்றி குறுகிய காலத்தில் சிறப்புற நிறைவு செய்த பிராம்டன் தமிழ் ஒன்றியத்தினரும் முதியோர் அமைப்பினரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். அதேவேளை பங்களித்த அனைவரும் தங்கள் பங்களிப்பு குறித்து பெருமைகொள்ளலாம். என மேலும் தெரிவித்தார்.

Tags: Featured
Previous Post

மக்களின் போராட்டமும், வடமாகாண முதலமைச்சரின் பதிலும்..

Next Post

பெறாமகள் பாலியல் துஷ்பிரயோகம்: கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி மா.இளஞ்செழியன்

Next Post
பெறாமகள் பாலியல் துஷ்பிரயோகம்: கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி மா.இளஞ்செழியன்

பெறாமகள் பாலியல் துஷ்பிரயோகம்: கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி மா.இளஞ்செழியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures