கனடிய பல்கலைக்கழகம் உருவாக்கிய உலகின் மிகச்சிறிய பனிமனிதன்.
கிறிஸ்மஸ் தினத்திற்கு ஒரு சில நாட்கள் இருக்கையில் ஒன்ராறியோ, வெஸ்ரென் பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவர் மிக நுண்ணிய உருவம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை “உலகின் மிகச்சிறிய பனிமனிதன்”என இவர் அழைக்கின்றார்.
பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரொட் சிம்சன் இந்த உருவம் நம்ப முடியாத அளவு சிறிய சிலிக்கா கோளங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். மூக்கும் கைகளும் பிளட்டினத்தால் செய்யப்பட்டடது. 3 மைக்கிரன்கள் உயரமானது. இந்த வருடத்தின் மிகச்சிறிய உருவமாகவும் இது விளங்குகின்றது.
இந்த உருவத்தை கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் உருவாக்க விரும்பியதாக தெரிவித்தார். மனித தலை முடி ஒன்றின் விட்டம் 50 மைக்கிரன்கள்-உருவாக்கப்பட்ட பனிமனிதனின் உயரம் ஆக 3மைக்கிரன்கள் தான். இதனை ஒரு மின்னணு நுண்நோக்கியால் தான் பார்க்க முடியும் என சிம்சன் தெரிவித்தார்.
சிலிகோன் செதிலிற்குள் வைக்கப்பட்டுள்ள இந்த உருவம் ஆய்வு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.