கனடிய கடற்படையின் இறுதி அழிக்கும் கப்பல் கலிவக்சை சுற்றி இறுதி பயணம்.
HMCS Athabaskan கனடாவின் மிகபெரிய சண்டை கப்பலாக பல வருடங்களாக இருந்துள்ளது.1970ல் இக்கப்பல் நியமிக்கப்பட்டது.
இக்கப்பல் 44வருட சேவைக்கு பின்னர் தனது இறுதி சுற்றை ஹலிவக்ஸ் துறை முகத்தில் மேற்கொண்டுள்ளது.
மற்றய மூன்று றோயல் கனடிய கடற்படை கப்பல்களுடன் இக்கப்பலும் இளைப்பாறுகின்றதென ஒட்டாவா இரண்டு வருடங்களிற்கு முன்னர் அறிவித்துள்ளது.
வளைகுடா போரின் போது 1990-91ல் பயன்படுத்தப்பட்டது.Hurricane Katrina விற்கு பின்னர் உதவிகள் விநியோகிக்க உபயோகிக்கப்பட்டது. இவை மட்டுமன்றி பல வகைப்பட்ட சர்வதேச ரீதியாக ஏற்படும் கனடாவின் நேட்டோ கடமைகளிற்காக பயன்பட்டது.
15 புதிய கப்பல்கள் இவைகளிற்கு பதிலாக சேவையில் ஈடுபடுத்த படும் என ஒட்டாவா தெரிவித்துள்ளது.