கனடிய ஆசிரியர் கோஸ்ரா ரிக்காவில் கொலை ?
ரொறொன்ரோ அல்பேட் கம்பெல் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கடந்த வார இறுதியில் கொஸ்ரா றிக்காவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்று கிழமை புறூஸ் மக்கலும் என்ற ஆசிரியர் உல்லாச பயண நகரான Puerto Viejo வில் விடுமுறையை கழிக்கும் சமயத்தில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
59-வயதுடைய இந்த ஆசிரியர் சூரிய உதயத்தை படங்கள் எடுக்க சென்றுள்ளார். அதிகாலை வேளையில் இரண்டு வாலிபர்கள் ஆசிரியரை எதிர் கொண்டதாக சம்பவ இடத்திலுள்ள வீடியோ காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிசார் ரொறொன்ரோ சிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஆசிரியரின் கமராவை அடித்த போது ஆசிரியர் போராட முயன்றுள்ளார். அச்சமயம் கத்தியை எடுத்து குத்தி அவரை நிலத்தில் தள்ளிவிட்டு விட்டு கமராவை திருடிவிட்டனர். இச்சம்பவத்தில் மூன்றாவது நபர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இக்கொலை சம்பந்தமாக இதுவரை எவரும் கைதாகவில்லை.
ஆசிரியர் எவ்வளவு நாட்கள் கொஸ்ரா றிக்காவில் தங்கியிருந்தார் என்பது தெளிவாகவில்லை.
ரொறொன்ரோ கல்வி சபையில் 20வருடங்களாக-ஸ்காபுரோவின் அல்பேட் கம்பல் கல்லூரி நிறுவனத்தில் 18வருடங்கள் உட்பட-பணிபுரிந்துள்ளார். இவர் ஒரு வருட ஓய்வு விடுமுறையில் உலக சுற்று பயணத்தை மேற்கொண்டிருந்தார். இவரது பயணம் நியு சீலந்து மற்றும் அவுஸ்ரேலியா விலிருந்து ஆரம்பித்தது.
அக்கறை மற்றும் ஆசிரியர் அணியின் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியராவார். அல்பேர்ட் கம்பல் சமுதாயத்தின் ஒரு சாதகமான முன்மாதிரியாக விளங்கினார்.
வியாழக்கிழமை காலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஒரு ஞாபகார்த்த நிகழ்வை நடாத்துகின்றனர். இந்நிகழ்வில் இவரின் மறைவிற்கு துக்கம் அனுட்டிக்கப்படும்.
.