கனடா வன்கூவர் பொலிஸ் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு

கனடா வன்கூவர் பொலிஸ் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு

வன்கூவர் பொலிஸ் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜேம்ஸ் ஃபிஷர் என்ற குறித்த அதிகாரி மீது, பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுக்களும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும் 18 வயதுக்கு குறைந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பிஷர் மீது நம்பிக்கை துரோகம் மற்றும் நீதியை தடுக்க முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்த விசாரணைகள் சர்ரே மாகாண நீதிமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிஷர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *