கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம்.
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது.
இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த சதீஸ் லோகநாதன் (35), இரண்டாவது நபர் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் எனவும் தெரியவருகிறது.
2ஆம் இணைப்பு
மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த சதீஸ் லோகநாதன் (35), இரண்டாவது நபர் 21 வயதுடைய OSHAWA பல்கலைக்கழக மாணவன் அதீஸ் பாலசுப்பரமணியம் எனவும் தெரியவருகிறது.
சதீஸ் லோகநாதன் (35)
அன்னார் நண்பர்களிடையே பெரும் மதிப்பையும் உறவினையும் பேணுபவர் என்றும் கடின உழைப்பாளி என்றும் அன்னாரின் மறைவினை தாங்கொணாத நண்பர்கள் துயரத்துடன் தெரிவித்துள்ளனர். காலஞ்சென்ற திரு. சதிஸ் அவர்கள் ஓட்டிய வாகனம் HONDA ACCORD என்று தெரிய வருகிறது. இவர் WHITBYயில் உள்ள Charly Ronick’s Pub ல் முகாமையாளர் ஆவர்
பிக்கறிங் நேற்றிரவு 11:30 மணியளவில் 26-12-2016 இடம் பெற்ற கோரவிபத்தில் பரிதாபகரமாக கொல்லப்பட்ட இருவருமே இலங்கைத்தமிழர்கள் என்பது கண்ணீர் கலந்த துயரச்செய்தி.
தொடர்ந்து கனடா DURHAM பொலிஸார் விபத்துக்குறித்து விசாரணை செய்து வருகின்றனர். நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின எனவும் தெரியவருகிறது.