கனடா நாட்டு பிரஜைக்கு ரூ.376 கோடி…..
கனடா நாட்டை சேர்ந்த குடிமகன் ஒருவர் தொடர்ந்து 35 ஆண்டுகளாக காத்திருந்து ரூ.376 கோடி பரிசை வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் உள்ள Gatineau நகரில் Marc Lachance என்ற நபர் வசித்து வருகிறார்.
கனடாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் லோட்டோ பரிசு சீட்டை இவர் கடந்த 35 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் வாங்கி வந்துள்ளார்.
‘இன்றல்ல….என்றாவது ஒரு நாள் எனக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கும். அப்போது, கிடைக்கும் பணத்தை உங்களுக்கு சரிபாதியாக பிரித்து கொடுப்பேன்’ என தனது சகோதர, சகோதரிகளிடம் தெரிவித்துள்ளார்.
நபரின் நீண்டகால நம்பிக்கை வீண் போகவில்லை. கடந்த சனிக்கிழமை அன்று 25 மில்லியன் டொலர்(376,32,50,000 இலங்கை ரூபாய்) வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மார்க் பேசியபோது, ‘எனக்கு நிச்சயமாக பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை’ என உற்சாகமாக கூறியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், ஏற்கனவே கூறியதை போல் தனக்கு கிடைத்த பரிசு தொகையை தனது சகோதர, சகோதரிகளுக்கு அவர் சமமாக பிரித்துக்கொடுத்துள்ளார்.
மேலும், இத்தொகையை பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.