டொன் வெலி பார்க்வேயில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொன் வெலி பார்க்வேயின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில், பே வியூ மற்றும் பூலர் வீதித் பகுதியிலேயே குறித்த விபத்து நேற்று சம்பவித்துள்ளது.
இதில் இருவர் சிறிய காயத்திற்குள்ளாகியுள்ளதாகவும் மற்றொருவர் ஆபத்தான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் மருத்துவபிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விதிமுறைகளுக்கு மாறாக வாகனத்தைச் செலுத்திச் சென்றதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்ககூடுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் வாகன சாரதி ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், இவ் விபத்து குறித்து தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.