கனடாவில் 12-வயதில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவன்.
கனடா-12-வயதுடைய டிக்கி சூர்யாட்மட்ஜா என்ற மாணவன் புதிய கல்வி ஆண்டில் பல்கலைக்கழகம் செல்கின்றான்.
மற்றய மாணவர்கள் போன்று 12-வயதில் பாடசாலை செல்லாது வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மேதகைமை கல்வி கற்க உள்ளான். இத்துடன் கணிதம், இரசாயனம், பொருளியல் பாடங்களையும் கற்பான்.
புதிய நண்பர்களை சந்திப்பதில் மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளான்.
தெற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழக வரலாற்றில் மிக இளவயது மாணவன் டிக்கி என பல்கலைக்கழக இணை பதிவாளர் அன்ட்ரே ஜாடின் தெரிவித்தார். இது ஒரு அசாதாரணமானதாகும் எனவும் கூறினார்.
இந்தோனேசியாவின் ஒரு மாகாணமான வெஸ்ட் ஜாவாவை சேர்ந்த டிக்கி பல்கலைக்கழகத்திற்கு அருகில் தொடர்மாடி கட்டிடமொன்றில் தனது தந்தையுடன் தங்கியிருந்து தனது கல்வியை முடிப்பான்.
வெப்பமண்டல நாடு ஒன்றை சேர்ந்த டிக்கியின் காலநிலை மட்டுமன்றி கலாச்சாரம் உணவு போன்றனவும் வித்தியாசமானதாக இருக்கும்.
கிட்டத்தட்ட ஆறுமாத காலமாக சிங்கபூரில் தங்கியிருந்து தன்சுய முயற்சியில் ஆங்கிலம் வாசிக்க பழகிகொண்டான். ஆங்கில படங்களை- விசேடமாக நகைச்சுவை- வசன வரிகளுடன் பாரத்துள்ளான்.
வாட்டர்லூ பல்கலைக்கழகம் ஒரு நன்மதிப்பு கொண்டது என்பதால் அங்கு விண்ணப்பித்தான். அறிவியல் துறைக்கு மிகச்சிறந்தது வாட்டர்லூ என்பதையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்ததாக தெரிவித்தான்.
புதுப்பிக்க தக்கதும் மலிவான விலையிலுமான எரிபொருளை உருவாக்க வேண்டும் என்பது தனது கனவாகும் என்றான்.
டிக்கிக்கு உதவிதொகை ஒன்றும் வழங்கப்பட்டது.