Easy 24 News

கனடாவில் வீட்டை விட்டு ஊர் ஊராக சுத்தும் விசித்திர தம்பதி

கனடாவில் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கணவன் மற்றும் மனைவி இருவரும் வாகனத்தில் நாட்டை சுற்றி வருவது ஆச்சரியமளித்துள்ளது.

கனடாவின் Calgaryஐ சேர்ந்தவர் Roy Graham, இவர் மனைவி Betty Caldwell. Roy மற்றும் Betty இருவரும் யூ டியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளனர்.

அதில் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சுதந்திரமாக வெளியில் உலா வருவதை இவர்கள் உற்று நோக்கியுள்ளனர்.

அதுபோலவே தாங்கள் செய்யவும் முடிவெடுத்து ஊரை சந்தோஷமாக சுற்றி வருகிறார்களாம்.

இதுகுறித்து Roy கூறுகையில், நாங்கள் இதுநாள் வரை இந்த செங்கலால் ஆன வீட்டின் உள்ளேயே கட்டி போட்டது போல இருந்து விட்டோம்.

எங்கள் வாழ்க்கையை வாழ நாங்கள் மறந்து விட்டோம் என கூறியுள்ளார்.

அதனால் இவர்கள் கனடா முழுவதும் சுற்று பயணம் செய்யவுள்ளனர். அதற்காக இவர்கள் தங்கள் துணையாக Walter என்னும் நாயை உடன் அழைத்து செல்கின்றனர்.

இவர்கள் ஒரு மாத பயணமாக கனடாவின் Okanagan-க்கு முதலில் செல்லவுள்ளனர்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *