கனடாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரதேசம் நுனவுட்?
ஒட்டாவா-2016 மக்கள் தொதை கணக்கெடுப்பின் பிரகாரம் நாட்டில் மிகவேகமாக வளர்ந்துவரும் முதல் பிரதேசமாக நுனவுட் நிற்கின்றது.
தொலைவான வடக்கு பிரதேசமான நுனவுட் 2011ற்கும் 2016ற்கும் இடைப்பட்ட காலப்பகுதி கணிப்பின் பிரகாரம் 12.7சதவிகிதம் அதிகரித்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐந்து வருடத்திற்கு முன்னைய கணிப்பைவிட 8.3சதவிகிதம் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
பிரதேசத்தின் வானுயர் பிறப்பு விகிதம் இதற்கு காரணமாகும்.
இதன் சனத்தொதை 35,944 ஆகும். 1999ல் இப்பிரதேசம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து முதல் தடவையாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் 2011 முதல் 2016ற்கிடைப்பட்ட காலப்பகுதியில் சனத்தொகை அதிகரிப்பு 4.4சதவிகிதமாகும்.தேசிய சராகரி விகிதிமான ஐந்து சத விகிதத்தைவிட இது குறைவானதாகும்.