கனடாவில் சிரிய அகதிகள் கொண்டாட்டத்தில்

கனடாவில் சிரிய அகதிகள் கொண்டாட்டத்தில்

சிறந்த அமைதியான வாழ்க்கை முறையை எதிர்பார்த்து, மோதல்கள் வலுத்து காணப்பட்ட சிரியாவிலிருந்து ஓராண்டிற்கு முன்னர் அகதிகளாக கனடாவை வந்தடைந்தனர்.

இந்நிலையில், தற்போது மொன்றியலில் வசித்துவரும் சிரிய அகதியொருவர் தாம் கனடாவை வந்தடைந்த தினத்தை நினைவுகூர்ந்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘எதிர்ப்பார்த்ததைவிட மிகவும் கஷ்டப்பட்டே மொன்றியலை வந்தடைந்தோம். எனினும், எமக்கு கனடியர்கள் கொடுத்த வரவேற்பானது அனைத்து துயரங்களையும் மறக்க வைத்துவிட்டது’ என்றார்.

ஓராண்டு நினைவை அரச தலைவர்களும், அகதிகளும் இணைந்த கொண்டாடி வருகின்றனர். இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களுடன் இணைந்து வரவேற்ற நிகழ்வானது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும் என கனடிய குடிவரவு அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *