கனடாவில் குழந்தைகள் உணவில் நச்சு தன்மை? வெளியான எச்சரிக்கை

கனடாவில் குழந்தைகள் உணவில் நச்சு தன்மை? வெளியான எச்சரிக்கை

கனடா-PC Organics குழந்தைகளின் உணவு வகைகள் சிலவற்றில் நச்சு தன்மை அச்சுறுத்தல் காரணமாக மீள அழைக்கப்படுகின்றன.
President’s Choice உணவுகளான இவற்றை தாய் நிறுவனங்களான அட்லான்டிக் சுப்பர்ஸ்ரோஸ், Loblaw நிறுவனங்கள் ஆகியன அவைகளின் PC பிரான்ட் அப்பிள், புளுபெரி & பச்சை பட்டாணி கலந்த குழந்தை உணவுகளில் நச்சுத்தன்மை அச்சுறுத்தல் காரணமாக மீள அழைக்கப்படுகின்றன.

இந்த உணவு வகைகளில் “அதிக ஆபத்து” உள்ளதாக கனடிய உணவு பரிசோதனை ஏஜன்சி சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

128-மில்லி லிட்டர்கள் கொண்ட அக்டோபர் 31, 2017 காலாவதி முத்திரை கொண்ட பக்கெட்டுக்களை உபயோகிக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றது. இவைகளில் கிளாஸ்டிரியம் நச்சேற்றம் உற்பத்தி செய்யும் பக்டீரியா சேர்ந்திருக்கலாம் என கருதப்படுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த உணவு கனடா பூராகவும் உள்ள Loblaw கடைகளில் விற்கப்பட்டுள்ளது.

UPC குறியீடு 0 60383 06292 7, கொண்ட கொள்கலன்களை வெளியே எறிய அல்லது வாங்கிய கடைகளில திரும்ப கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

கிளாஸ்டிரீயம் கடுமையான ஒரு நோய். தசை பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடியது.

call1call

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *