கனடாவில் கட்டிடங்களிற்கு 29 பிரசித்தி பெற்ற பெண்களின் பெயர்கள்!
ஒட்டாவா-மத்திய அரசாங்கம் 29 முக்கியத்துவம் வாய்ந்த கனடிய பெண்களின் பெயர்களை கட்டிடங்களிற்கு வைப்பதற்கு பட்டியல் இட்டுள்ளது. கட்டிடங்களிற்கு இவர்களின் பெயர்களை இட்டு கௌரவப்படுத்துவதற்கு இவர்கள் தகுதியானவர்கள் என அரசாங்கம் எண்ணுகின்றது.
இதுவரை எவரும் தெரிவாகவில்லை ஆனால் இப்பட்டியல் எதிர்கால பயன்பாட்டிற்கு கிடைக்க கூடியதாக இருக்கும் என பொது பணித்துறை தெரிவித்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பட்டியலில் பெண்கள் உரிமை ஆர்வலர் நீல் மக்கிளங், முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேர்தா வில்சன் மற்றும் அணு இயற்பியல் விஞ்ஞானியான ஹரியட் புறூக்ஸ் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
முன்னைய கன்சவேட்டிவ் அரசாங்கம் 13 மத்திய அரசின் கட்டிடங்களிற்கு பெண்களின் பெயர்களை சூட்டியுள்ளது. 1812 போரின் ஹீரோ லோறா ஸ்கோட் மற்றும் விஞ்ஞானி டாக்டர் அல்விறெடா பேர்க்லி அடங்குவர்.
புதிய லிபரல் அரசாங்கம் அதன் முதல் அரச கட்டிடத்தின் பெயரை வியாழக்கிமை திரை நீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் கவரனர் ஜெனரல் றோமியோ லபிளாங்கை கௌரப்படுத்தும் முகமாக வியாழக்கிழமை கிரேட்டர் மொன்ங்ரன் சர்வதேச விமான நிலைய கட்டிடத்திற்கு பெயரிட உள்ளது.
கனடிய மக்கள் தங்கள் பொது நிறுவனங்கள் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன என்பதை காண விரும்புகின்றனர் என பெண்கள் நிலை குறித்த விமர்சகரும் புதிய ஜனநாயக கட்சி எம்பியுமான ஷீலா மல்கொல்ம்சன தெரிவித்துள்ளார்.
Nellie McClung
Harriett Brooks