கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்சியான செய்தி

இலங்கை – கனடாவிற்கு இடையில் தடங்கலற்ற விமான சேவையினை நடத்தும் நோக்கில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் வசிப்பவர்களில் அதிகமான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருவதுடன், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்வித விமானசேவை உடன்படிக்கைகளும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *