கனடாவில் இறைச்சி விலைகள் அதிகரிப்பு!

ரொறொன்ரோ-கனடாவின் வருடாந்த உணவு பணவீக்கம் இந்த வருடம கடந்த வருடத்தை விட குறைந்துள்ளதென எதிர்பார்த்திருக்கையில் கடைக்காரர்கள் இறைச்சி வகைகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்க வேண்டும் என கனடாவின் வருடாந்த உணவு பொருட்களின் விலைகள் குறித்த ஆய்வாளர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது.
மளிகை பொருட்கள் மற்றும் உணவகங்களின் உணவு விலைகள் டிசம்பர் மாதம் இவர்கள் எதிர்பார்த்த மூன்று முதல் ஐந்து சதவிகிதத்தை விட இந்த வருடம் மூன்று மற்றும் நான்கு சதவிகிதம் உயரும் என ஹலிவக்ஸ் டல்ஹெளசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இறைச்சி விலை அவர்கள் நினைத்ததை விட அதிகமாக  உயர்ந்து காணப்படும். வருட முடிவில் இந்த அதிகரிப்பு ஏழு முதல் ஒன்பது சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பழங்களின் விலை ஆக கூடியது ஐந்து சதவிகிதத்தாலும் மரக்கறி வகைகள் நான்கு சதவிகிதத்தாலும் அதிகரிக்கும் என்பதையும் கனடியர்கள் காண எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

meat1

veggi

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *