கனடாவில் இனி தமிழில் கனடா தேசிய கீதம்

 

கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் எதிர்வரும் யூலை 1ம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் , அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *