நியு பிறவுன்ஸ்விக்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூச்சி ஒன்றிற்கு கனடாவின் 150வது பிறந்த நாளை கொண்டாட புதிய பெயர் வழங்கப்படுகின்றது.
அபிமெலா கனடென்சிஸ் ஒரு சிறிய வண்டு நாட்டின் புதிய இனமாகும்.
இந்த வண்டு மிக சிறிய மில்லி மீற்றர்கள் நீளமுடையவை ஆறுகள் மற்றும் நீரோடை கரையோரங்களில் மணல்களிற்குள்ளும் சரளை கற்களிற்கிடையும் வசிக்கும்.
இந்த வண்டு உள்ஊர் விலங்கியல் ஆராய்ச்சியாளர் றெஜினால்ட் வெப்ஸ்ரரால் நியு பிறவுன்ஸ்விக்கில் 2008ல் கண்டுபிடிக்கப்பட்டது.க
கியுபெக் நோவ ஸ்கோசியா ஒன்ராறியோ ஆகிய மாகாணங்களிலும் காணப்படலாம் என கூறப்படுகின்றது.
தற்போது குறிப்பிடத்தக்க அளவு மிக சிறிய பூச்சியான இது சுற்று சூழலிற்கு தீங்கு விளைவிக்காதென கருதப்படுகின்றது.
வெப்ஸ்ரர் ஏற்கனவே 53-ற்கும் மேற்பட்ட பூச்சி வகைகளை கண்டுபிடித்துள்ள போதிலும் கனடென்சிஸ் எனப்படும் இந்த வகையை இதற்கு முன்னர் கண்டுபிடிக்கவில்லை.
இப்புதிய வண்டு கனடிய பெயரை பெறுகின்றது. கனடாவில் மட்டும் காணப்படுவதால் இப்பெயர் பொருத்தமானதாக இருக்கும்.