கனடாவின் பாடசாலை பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை

கனடாவின் பாடசாலை பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை

கனடாவின் மனிட்டோபா மாகாணத்தின் பிராண்டன் நகரில் இயங்கும் 43 பாடசாலை பேருந்துகளிலும் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இயங்கும் இரு பேருந்துகளில் ஏற்கனவே கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஏனைய 41 பேருந்துகளுக்கான கமராக்கள் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

பேருந்தினுள் பொருத்தப்படும் கண்காணிப்பு கமராவினால், பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் உட்பட ஏனையோரது நடத்தை முறை, சட்டவிரோத நடவடிக்கைகள் என்பன அவதானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தை பாதுகாப்பாக செலுத்துவதானது, சாரதிகளின் முக்கிய பணியாக காணப்படுகின்றது. சாரதிகளின் நடவடிக்கைகளும் இதன்மூலம் அவதானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *