கனடாவின் ஒரே ஒரு வாழை விவசாயியை சந்தித்திருக்கின்றீர்களா?

கனடாவின் ஒரே ஒரு வாழை விவசாயியை சந்தித்திருக்கின்றீர்களா?

11வருடங்களிற்கு முன்னர் கார் விபத்து ஒன்றில் மூளை பாதிக்கப்பட்டதால் இயந்திர பொறியியலாளரான ரெறி பிறேக் தனது வேலையை விட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். நடப்பதற்கும் கதைப்பதற்கும் மீண்டும் கற்க வேண்டிய நிலைமை இவருக்கு ஏற்பட்டது. நீண்ட தூரம் நடக்கமுடியாது.
இவரது சிகிச்சையின் ஒரு பகுதியாக இவர் ஓய்வு எடுப்பதற்காக இவரது தெற்கு ஆபிர்க்க வைத்தியர் ஒரு வாழை மரத்தை கொடுத்தார்.இந்த சமிக்கை ஆலோசனை ஒன்றை தோற்று வித்தது.
இவரது நீண்ட கால பராமரிப்பாளரான லோறி மக்பேர்சன் 40 ஹெக்டர் விவசாய பண்ணை ஒன்றை குரோன் கவுன்ரியில் வாங்கிய போது நோக்கம் விதைக்கப்பட்டது.இருவரும் வணிக பங்காளிகளாகி வெப்ப மண்டல பழ பண்ணை ஒன்றை ஆரம்பித்தனர்.
ஒன்ராறியோவின் காலநிலையில் வாழைப்பழம் மற்றும் பப்பாயா போன்றனவற்றை அதிநவீன் ஆய்வகம் மற்றும் தோட்டவியலாளர்கள் குழுவின்றி முயற்சிப்பது கடினம் என தோன்றிய போதும் இருவரும் சாதாரணமாக ஆரம்பித்தனர்.பல முயற்சிகள் பிழைகளின் பின்னர் வேரிட ஆரம்பித்தது.
இந்த பண்ணை ரொறொன்ரோ மேற்கில் மூன்று மணித்தியால வாகன பயணத்தில் குரோன் லேக்கின் கிழக்கில் பிளித் என்ற இடத்தில் அமைந்துள்ளது.பெரிய பல்பொருள் அங்காடிகளில் வெப்ப மண்டல நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பழங்களின் விலைகளை விட இவர்களிடம் மலிவாக கிடைக்க கூடியதாக இருக்கின்றது. வாழைப்பழங்கள் 2டொலர்கள்.பப்பாய ஒன்று 3டொலர்களாகும்.
பழங்கள் மட்டுமன்றி வெப்ப மண்டல காய்கறி வகைகளையும் உற்பத்தி செய்கின்றனர்.
அன்னாசி, கொய்யா, தோடம்பழங்கள், லெமன் போன்றனவும் உற்பத்தி செய்கின்றனர்.
இவர்களது பண்ணையில் மூன்று வலய வீடுகள் தற்போது உள்ளன. தங்களது முயற்சியை விரிவுபடுத்த இவர் விரும்புகின்றார்.விரிவு படுத்துவதன் மூலம் மற்றய நாடுகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படாதென இவர்கள் கருதுகின்றனர்
விளச்சி விளிம்பிபழம் மற்றும் கொடித்தோடைப்பழம் போன்றவைகளை இந்த வருடம் அறிமுகப்படுத்துகின்றனர்.தெனனை மரம் பயிரிட முயன்று தோல்வியடைந்ததாக கூறினார்.

farmfarm1farm3farm4farm5farm6farm7farm8

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News