கோஸ்ர றிக்காவிலிருநது ரொறொன்ரோ செல்லும் வழியில் எயர் கனடா விமானம் ஒன்று கட்டுங்கடங்காத பயணி ஒருவரால் மியாமியில் தரையிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியது.
திட்டமிடப்படாத இந்த தரிப்பு வியாழக்கிழமை இரவு 11-மணியளவில் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றதென விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மீண்டும் விமானம் நடுஇரவு புறப்பட்டது.
AC1807, போயிங் 767 விமானத்தில் சம்பவம் நடந்த போது 281 பயணிகள் இருந்துள்ளனர்.ஒரு பயணி குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கேப்டன் விமானத்தை மியாமி நோக்கி திசை திருப்ப அங்கு குறிப்பிட்ட பயணி விமானத்தை விட்டு இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்தின் பின்னர் விமானம் தொடர்து ரொறொன்ரோ நோக்கி புறப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டது.
பயணியின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை.