கட்டப்பட்டுகொண்டிருந்த வீட்டை கவிழ்த்து வீழ்த்திய வன் காற்று!
ரொறொன்ரோ-புதன்கிழமை இரவு வீசிய பலத்த காற்றினால் லெஸ்லிவில் பகுதியில் அமைந்திருந்த வீடுகளில் வசித்தவர்கள்வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்பகுதியில் கட்டப்பட்டு கொண்டிருந்த வீடுகளில் ஒன்று புதன்கிழமை இரவு அடித்த பலத்த காற்றினால் ஆட்டம் காணத்தொடங்கியதால் இந்த வெளியேற்றம் இடம்பெற்றது.
கட்டப்பட்டு கொண்டிருந்த வீடொன்று முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்ததாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு 9.30மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பகுதிகளில் புதன்கிழமை இரவு வன்மையான காற்று மணித்தியாலத்திற்கு 60ற்கும் 80ற்கும் இடைப்பட்ட கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசியது.
எவருக்கும் காயமேற்படவில்லை.
வீட்டை சரிசெய்ய முடியுமா அல்லது இடிக்கப்பட வேண்டியதா என்பது குறித்து தீர்மானிக்கும் முயற்சியில் நகர இன்ஸ்பெக்டர் மற்றும் பொறியியலாளர் முயன்றுவருகின்றனரென தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
