சட்ட விரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியா சென்ற முன்னாள் போராளி ஒருவர் இலங்கைக்கு நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டார். அவர் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்து குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 2012ஆம் ஆண்டு 44 பேருடன் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.