திருப்பதியில் கட்டுப்பாட்டை இழந்த லொறி டீக்கடைக்குள் புகுந்ததில் 15 பேர் பரிதாபமாக பலியானதில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மணல் கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது லொறியை வைத்து திட்டமிட்டு விபத்து நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி அருகே புதல பட்டு நாயுடுப்பேட்டா பி எஸ் சாலையில் வேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த லொறி டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில், உயிரிழந்தவர்களில் அதிகமானோர் ரேணிகுண்டா காவல் நிலையத்தின் அருகில் மணல் கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதனிடையே, இந்த விபத்தானது அப்பகுதியில் மணல் கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் மணல் திருட்டு காலம் தொட்டு நடந்து வருவதாகவும், இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.