பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
குறித்த நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (01) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது.
எனினும் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவ தளபதியாக செயற்படுவார் என இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்ட அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

