கடந்த வருடத்தை விட 27.7சதவிகிதம் அதிகரித்துள்ள ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வீட்டு விலைகள்.
ரொறொன்ரோ- பிப்ரவரி மாதத்தின் வீடு விற்பனை ஒரு வருடத்திற்கு முன்னயதுடன் ஒப்பிடுகையில் 5.7சதவிகிதம் உயர்ந்து உள்ளதுடன் இப்பிரதேசத்தின் சராசரி வீடொன்றின் விலையும் உயர்ந்துள்ளதாக ரொறொன்ரோ வீட்டு வாரியம் தெரிவிக்கின்றது.
வீடொன்றின் சராசரி விற்பனை விலை ரொறொன்ரோ பெரும்பாகத்தில் டொலர்கள் 875,983 எனவும் ஒரு வருடத்திற்கு முன்னய விலையுடன் ஒப்பிடுகையில் 27.7சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் வாரியம் தெரிவிக்கின்றது.
இந்த அதிகரிப்பு ரொறொன்ரோ நகர்ப்புறத்தில் 19.2சதவிகிதம் அதிகரித்து டொலர்கள் 859,186ஆகவும் ரொறொன்ரொ பெரும்பாகத்தின் மற்றய பகுதிகளில் கிட்டத்தட்ட 33.1ஏறி 885,508டொலர்களாகவும் காணப்படுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கான MLS HPI ஒட்டுமொத்த உச்சவரம்பு விலை 2016உடன் ஒப்பிடுகையில் 23.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பல பட்டியல் சேவை ஊடாக {MLS} கடந்த மாதம் 8,014 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ வாரியம் தெரிவிக்கின்றது. இத் தொகை ஒரு வருடத்திற்கு முன்னயதை விட 7,583 அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் மொத்தமாக 9,834 புதிய பட்டியல் இறக்கமடைந்ததால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.