கச்சத்தீவு விவகாரம் – பணம் வாங்கிய கருணாநிதி: சுப்ரமணியன் சாமி பகீர் குற்றச்சாட்டு
கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் தந்தார் என பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து தமிழர்களை சீண்டிக்கொண்டே இருக்கிறார். தமிழக பாஜகவும் மத்திய பாஜகவும் மௌனமாக இருந்து அவரது சர்ச்சைப் பேச்சுக்களுக்கு ஆதரவளிப்பதாகவே சமூக ஆர்வலர்களின் கூற்று.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமியின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.