ரொறொன்ரோ– ஒரு தசாப்தத்தில் ஒன்ராறியோவின் முதலாவது சீரான வரவு செலவுத்திட்டம் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டம் முதியோர், மாணவர்கள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் நோயாளிகள் நலன்களிற்காக புதிய பணத்தை கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் ஆண்டு ஒன்ற எதிர்நோக்குகையில் புதிய செலவினங்களை லிபரல் அரசாங்கத்தின் இந்த பற்றாக்குறை இல்லாத நிதித்திட்டம் வழங்குகின்றது.
நியாயமான வகையில் சேவைகளை குறைக்க விரும்பாத தனது அணுகுமுறைகள், வரிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமையும் எனவும் இதன் பயனாக ஒன்ராறியோ மக்கள் நன்மையடைவார்கள் என தான் நம்புவதாகவும் இவ்வாரம் முதல்வர் கத்லின் வின் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டம் முதியோர்களின் பொது போக்குவரத்து வரி கடன் மற்றும் சுகாதார பராமரிப்பு துறைகளில் மேலதிக நன்மை பயக்கும் என நிதி அமைச்சர் சார்ள்ஸ் சுசா ஏற்கனவே அறிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.
மேலும் நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களிற்கு சுகாதார பராமரிப்பாளர்களாக இருப்பவர்களிற்கான ஓய்வுகால சேவைகள் நிதி அதிகரிப்பு, சிறுவர்-பராமரிப்பு இடங்களிற்கான நிதி மற்றும் மாணவர் ஒருவரின் வேலை வாய்ப்பு பயிற்சி வேலை வாய்ப்பு முயற்சி, கண்டு பிடிப்பு முதலீடுகள், மலிவு வீடுகளிற்கான நிதி போன்றவற்றிகு அரசாங்கம் நிதியுதவி வழங்கும் என ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இந்த வருடத்தின் சீரான வரவு செலவு திட்டத்துடன் ஒன்ராறியோ 300பில்லியன் டொலர்களிற்கும் மேலான தொகையை கடனாக கொண்டிருக்கும்.
2016-17ல் மாகாணத்தின் நான்காவது-மிகப்பெரிய செலவு பகுதியில் 11.4பில்லியன் டொலர்கள் வட்டியுடன் கிட்டத்தட்ட 317-பில்லியன் டொலர்கள் கடனாகும்.
லிபரல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாகாணத்தின் கடன் மும்மடங்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.