ஒன்ராறியோ திட்டத்திற்கு 3.35 மில்லியன் கனேடிய டொலர்கள் முதலீடு!
ஒன்ராறியோ இணைப்புப் பயிற்சித் திட்டத்தின் (Ontario Bridge Training Program) மூலம், ஒன்றாரியோ மாகாண அரசு 3.35 மில்லியன் கனேடிய டொலர்களை முதலீடு செய்துள்ளது.
சர்வதேச நாடுகளில் பட்டம் மற்றும் பயிற்சி பெற்ற குடிவரவாளர்கள், தமது திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள உதவும் வகையாக இந்த தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதலீடு 11 வகையான இணைப்புப் பயிற்சித் திட்டங்களிற்கு நிதி ஆதரவு வழங்கும் என கூறப்படுகின்றது.
ஒன்ராரியோ இணைப்புப் பயிற்சித் திட்டம் ஒவ்வொரு வருடமும் 6,000 சர்வதேச நாடுகளில் பட்டம் மற்றும் பயிற்சி பெற்ற குடிவரவாளர்கள், தமது திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள உதவும்.