ஒன்பது வயது இரட்டையர்கள் வாகனத்தால் மோதப்பட்டனர்.
ரொறொன்ரோ-சனிக்கிழமை காலை நோத்யோர்க் பகுதியில் ஒன்பது வயதுடைய இரட்டை சகோதரர்கள் அவசரமாக அவசர மருத்துவ சேவைப்பிரிவினரால் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டனர்.இருவரும் வீதியை கடக்கையில் வாகனமொன்றினால் மோதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் கூற்று பிரகாரம் இரட்டையர் இருவரும் செப்பேர்ட் அவெனியு மேற்கில் மகெலென் டிரைவில் வீதியை கடந்து செல்கையில் மினி வான் ஒன்றினால் மோதப்பட்டதாக தெரிய வந்துள்ளது
இருவரும் நூல்நிலையம் ஒன்றை நோக்கி கடக்க முயல்கையில் விபத்து நடந்துள்ளது.இச்சமயம் இருவரும் தனியாக காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவனுக்கு உயிராபத்தான காயங்களும் மற்றவனுக்கு கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளது.
20-வயதுடைய மினி வான் சாரதி ஒரு பெண்.இவர் சம்பவ இடத்தில் நின்றுவிட்டார்.
வேகம், சாரதியின் தவறு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கை என்பன உட்பட விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாகன சாரதியும் பொலிசாரின் விசாரனைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் சம்பவம் நடந்த நேரம் அப்பகுதியில் காணப்பட்டவர்களிடமும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது.